வாகனம் மோதி டேங்க் ஆபரேட்டர் பலி
தூசி அருகே அடையாளம் தெரியாத வாகனம் மோதி டேங்க் ஆபரேட்டர் பரிதாபமாக உயிரிழந்தார்.
தூசி
திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் தாலுகா வடமாவந்தல் கிராமம் பெரியார் நகரை சேர்ந்தவர் முருகன் (வயது 59). இவர் டேங்க் ஆபரேட்டராக வேலை பார்த்து வந்தார். இவர் தண்ணீர் திறந்துவிட சைக்கிளில் சென்று கொண்டிருந்தார்.
அப்துல்லாபுரம்-மோரணம் சாலையில் நமண்டி கூட்ரோடு அருகே சென்றபோது, அந்த வழியாக சென்ற அடையாளம் தெரியாத வாகனம் திடீரென அவரின் சைக்கிள் மீது மோதி விட்டு நிற்காமல் சென்று விட்டது. அதில் தூக்கி வீசப்பட்ட முருகன் சம்பவ இடத்திலேயே பலியானார்.
இந்த விபத்து குறித்து தூசி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.