வெள்ளகோவில், மார்ச்.29-
வெள்ளகோவில், மூலனூர், தாராபுரம் ஆகிய ஊர்களுக்கு கொடுமுடியில் இருந்து, காவிரி கூட்டு குடிநீர் திட்டத்தின் கீழ் குடிநீர் வினியோகம் செய்யப்பட்டு வருகிறது. இந்த குடிநீர் திட்ட பிரதான குடிநீர் குழாய் வெள்ளகோவில் அருகே உள்ள மாந்தபுரம் என்ற இடத்தில் செல்கிறது. இந்த குழாயில் உடைப்பு ஏற்பட்டு நீர் வீணாகிறது. தற்போது வெயில் காலமாக இருப்பதால் குடிநீர் பற்றாக்குறை ஏற்பட வாய்ப்புள்ளது. இந்த நிலையில் இப்படி குடிநீர் வீணாவதால் அனைத்து பகுதிகளுக்கும் உரிய நேரத்தில் கிடைக்கவேண்டிய குடிநீர் கிடைப்பதில்லை.
எனவே குடிநீர் வடிகால் வாரியத்தினர் உடனே நடவடிக்கை எடுத்து குழாய் உடைப்பை சரி செய்து குடி நீர் வீணாவதை தடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.