தாம்பரம் பஸ் நிலையத்தில் பஸ்-கார் மோதல்; ஜி.எஸ்.டி.சாலையில் போக்குவரத்து நெரிசல்

தாம்பரம் பஸ் நிலையத்தில் பஸ்-கார் மோதல் விபத்தால் ஏற்பட்ட நெரிசலில் தாம்பரம் ஜி.எஸ்.டி.சாலையில் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.

Update: 2022-03-28 12:41 GMT
சென்னை அடுத்த தாம்பரம் பஸ் நிலையத்தில் போக்குவரத்து நெரிசலில் சிக்கிய மாநகர பஸ் ஒன்று நேற்று தன் கட்டுப்பாட்டை மீறி அங்கு சென்று கொண்டிருந்த கார் மீது மோதிய விபத்தில் அந்த கார் சுக்குநூறாக நொறுங்கியது. இந்த விபத்தில் அதிர்ஷ்டவசமாக லேசான காயத்துடன் கார் டிரைவர் உயிர் தப்பினார்.

இந்த விபத்தால் ஏற்பட்ட நெரிசலில் தாம்பரம் ஜி.எஸ்.டி.சாலையில் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. தாம்பரம் பஸ் நிலைய வாசல் பகுதியில் உள்ள சாலைகளில் தொடர்ச்சியாக பஸ் மற்றும் ஷேர் ஆட்டோக்கள் போட்டி போட்டு அணிவகுத்து நிற்பதால் அடிக்கடி இதுபோன்ற விபத்துக்கள் ஏற்பட்டு வருவதாக கூறப்படுகிறது.

போக்குவரத்து போலீசார் தாம்பரம் பஸ் நிலையப் பகுதியில் ஷேர் ஆட்டோக்களை ஒழுங்குபடுத்தும் பணியில் ஈடுபட்டு போக்குவரத்து நெரிசலுக்கு நிரந்தர தீர்வு காண வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

மேலும் செய்திகள்