வாலிபரை தாக்கி செல்போன் பறித்த 2 பேர் கைது

வாலிபரை தாக்கி செல்போன் பறித்த 2 பேர் கைது

Update: 2022-03-28 12:40 GMT
பல்லடம் அருகே உள்ள மாதப்பூரைச் சேர்ந்த சுப்பிரமணி மகன் மதன் .  இவர் பல்லடத்தில் உள்ள தனியார் செல்போன் நிறுவனத்தில் பணிபுரிந்து வருகிறார். இவருக்கும் திருப்பூரில் வசிக்கும் இசக்கிராஜா என்பவருடன்  பழக்கம் ஏற்பட்டது. இந்த நிலையில் கடந்த 25ந் தேதி வேலைக்குச் சென்ற மதன் வீடு திரும்பவில்லை. அவரது செல்போனும் சுவிட்ச் ஆப் செய்யப்பட்டிருந்தது. இதையடுத்து மதனின் அண்ணன் கவின் பல இடங்களில் விசாரித்து விட்டு மதனை காணவில்லை எனவும் அவரை கண்டுபிடித்து தரும்படி பல்லடம் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். 
இது குறித்து வழக்குப் பதிவு செய்த போலீசார் அவரை தேடி வந்தனர். இந்த  நிலையில் நேற்று முன்தினம் மதன் திருப்பூர் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாக தகவல் கிடைத்தது. இதையடுத்து அங்கு சென்ற பல்லடம் போலீசார் மதனிடம் விசாரணை நடத்தினர். 
விசாரணையில் மது அருந்தியபோது இசக்கி ராஜாவும், அவருடைய நண்பர் சேர்ந்து மதனை தாக்கி  செல்போன் மற்றும் மோட்டார் சைக்கிளை திருடி சென்றதாக தெரியவந்தது.  இந்த வழிப்பறி குறித்து மதன் கொடுத்த புகாரின்பேரில் வழக்குப்பதிவு செய்த பல்லடம் போலீசார் விசாரணை மேற்கொண்டு, திருநெல்வேலியைச் சேர்ந்த கண்ணன் மகன் இசக்கிராஜா   கொடைக்கானலை சேர்ந்த ராமன் மகன் வினோத் என்கிற பாலமுருகன் ஆகிய  2 பேரையும் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து  மோட்டார் சைக்கிள் மற்றும் செல்போனை பறிமுதல் செய்யப்பட்டது. கைதான  2 பேரும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். 

மேலும் செய்திகள்