வங்கி ஊழியர்கள் வேலைநிறுத்தம் ரூ750 கோடி பண வரித்த்தனை பாதிப்பு
வங்கி ஊழியர்கள் வேலைநிறுத்தம் ரூ750 கோடி பண வரித்த்தனை பாதிப்பு
ிருப்பூர் மாவட்டத்தில் வங்கி ஊழியர்கள் வேலைநிறுத்தம் காரணமாக ரூ.750 கோடிக்கு பண பரிவர்த்தனை பாதிக்கப்பட்டது. ஏ.டி.எம்.களில் பணம் இல்லாமல் வெறிச்சோடின. இதனால் வாடிக்கையாளர்கள் தவித்தனர்.
ரூ.750 கோடி பரிவர்த்தனை பாதிப்பு
மத்திய அரசின் பொருளாதார கொள்கைகள், தொழிலாளர் விரோத சட்டங்களுக்கு எதிராக அனைத்து வங்கி ஊழியர்கள் சங்கத்தினர் 2 நாட்கள் வேலைநிறுத்த போராட்டத்தை அறிவித்தனர். அதன்படி நேற்று நடந்த வேலை நிறுத்தத்தில் வங்கி ஊழியர்கள் சங்கத்தினர் பங்கேற்றனர். திருப்பூர் மாவட்டத்தில் தேசியமயமாக்கப்பட்ட மற்றும் தனியார் வங்கி கிளைகள் 347 உள்ளன. இந்த வேலைநிறுத்தத்தில் 300 வங்கி கிளைகளை சேர்ந்த 1,700 ஊழியர்கள் பங்கேற்றார்கள். இதனால் வங்கி பணிகள் கடுமையாக பாதிக்கப்பட்டன.
பொதுமக்கள் அவசர தேவைக்காக பணத்தை அனுப்ப முடியாமல் சிரமம் அடைந்தனர். பனியன் தொழில் நகரான திருப்பூரில் திங்கட்கிழமையன்று வங்கிகளில் கோடிக்கணக்கான பண பரிவர்த்தனை நடைபெறுவது வழக்கம். நேற்று ஊழியர்கள் பணிக்கு வராததால் ஆன்லைன் மற்றும் காசோலை பண பரிவர்த்தனை கடுமையாக பாதிக்கப்பட்டன. இதனால் நாளொன்றுக்கு ரூ.750 கோடிக்கு பண பரிவர்த்தனை பாதிக்கப்பட்டது என்று திருப்பூர் மாவட்ட அனைத்து வங்கி ஊழியர் கூட்டமைப்பின் ஒருங்கிணைப்பாளர் மனோகரன் தெரிவித்தார்.
ஏ.டி.எம்.களில் பணம் இல்லை
ஏ.டி.எம். மையங்களில் பணம் நிரப்பப்படாததால் பொதுமக்கள் கடும் பாதிப்படைந்தனர். சனி, ஞாயிற்றுக்கிழமை விடுமுறை என்பதால் ஏ.டி.எம்.களில் பணம் நிரப்பும் பணி பாதிக்கப்பட்டது. நேற்றும் ஊழியர்கள் வேலைநிறுத்தத்தால் பெரும்பாலான ஏ.டி.எம்.கள் பணம் இல்லாமல் காலியாக காணப்பட்டன. இன்று செவ்வாய்க்கிழமை 2வது நாளாக வேலைநிறுத்தம் நடக்கிறது. இது மக்களை பெரிதும் சிரமத்தில் ஆழ்த்தும்.
இதுபோல் எல்.ஐ.சி. அலுவலகம், தபால் நிலையங்களில் ஊழியர்கள் பணிக்கு வராததால் பல்வேறு பணிகள் பாதிக்கப்பட்டன. வேலைநிறுத்தம் தெரியாமல் தபால் நிலையம், வங்கிகள், எல்.ஐ.சி. அலுவலகங்களுக்கு வந்த மக்கள் சிரமத்தை சந்தித்தனர். பலர் ஏமாற்றத்துடன் வீடு திரும்பினார்கள்.