சென்னை மாநகராட்சி சாலைகளில் சுற்றித்திரிந்த மாடுகளின் உரிமையாளர்களுக்கு ரூ.11 லட்சம் அபராதம்

சென்னை மாநகராட்சி சாலைகளில் சுற்றித்திரிந்த மாடுகளின் உரிமையாளர்களுக்கு ரூ.11 லட்சம் அபராதம் விதித்தது பெருநகர சென்னை மாநகராட்சி.

Update: 2022-03-28 11:21 GMT
பெருநகர சென்னை மாநகராட்சி சார்பில் பொதுமக்களுக்கு இடையூறாக சாலைகளில் சுற்றித்திரியும் மாடுகள் மாநகராட்சியின் பொது சுகாதாரத்துறையினரால் பிடிக்கப்பட்டு சென்னை பெரம்பூர், புதுப்பேட்டையில் உள்ள மாட்டுத்தொழுவங்களுக்கு கொண்டு செல்லப்படும். இந்நிலையில், பெருநகர சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதியில் கடந்த 1-ந் தேதி முதல் 25-ந் தேதி வரை பொதுமக்களுக்கு இடையூறாக சுற்றித்திரிந்த 710 மாடுகள் மாநகராட்சி ஊழியர்களால் பிடிக்கப்பட்டு, தலா ரூ.1,550 வீதம் அந்த மாடுகளின் உரிமையாளர்களுக்கு ரூ.11 லட்சத்து 500 அபராதமாக விதிக்கப்பட்டுள்ளது. மேற்கண்ட தகவல் அனைத்தும் பெருநகர சென்னை மாநகராட்சி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

மேலும் செய்திகள்