வேலூரில் கிணற்றில் பிணமாக மிதந்த தொழிலாளி

வேலூரில் தொழிலாளி ஒருவர் கிணற்றில் பிணமாக மீட்கப்பட்டார்.

Update: 2022-03-28 11:08 GMT
வேலூர்

வேலூர் சலவன்பேட்டை திருப்பூர்குமரன் தெருவை சேர்ந்தவர் கோவிந்தன் (வயது 52), கூலித்தொழிலாளி. இவருக்கும் அவருடைய மனைவிக்கும் கடந்த 26-ந் தேதி குடும்ப பிரச்சினை காரணமாக தகராறு ஏற்பட்டுள்ளது. அதனால் கோவிந்தன் கோபத்துடன் வீட்டை விட்டு வெளியே சென்றுள்ளார். அதன்பின்னர் அவர் வீடு திரும்பவில்லை. இந்த நிலையில் சலவன்பேட்டை எம்.ஜி.ஆர்.நகர் பகுதியில் உள்ள விவசாய கிணற்றில் கோவிந்தன் பிணமாக மிதந்துள்ளார். இதைக்கண்டு அதிர்ச்சி அடைந்த பொதுமக்கள் உடனடியாக போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.

அதன்பேரில் வேலூர் தெற்கு போலீசார் அங்கு சென்று உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அடுக்கம்பாறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிந்து கோவிந்தன் தற்கொலை செய்து கொண்டாரா அல்லது வேறு ஏதாவது காரணம் உள்ளதா என்பது குறித்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

மேலும் செய்திகள்