2 நாட்கள் விடுமுறைக்கு பிறகு கர்நாடக சட்டசபை இன்று மீண்டும் கூடுகிறது
2 நாட்கள் விடுமுறைக்கு பிறகு கர்நாடக சட்டசபை இன்று மீண்டும் கூடுகிறது
பெங்களூரு: கர்நாடக சட்டசபையின் பட்ஜெட் கூட்டத்தொடர் கடந்த 4-ந் தேதி பெங்களூரு விதான சவுதாவில் தொடங்கியது. முதல் நாளில் 2022-23-ம் ஆண்டுக்கான பட்ஜெட்டை முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை தாக்கல் செய்தார். அதைத்தொடர்ந்து அந்த பட்ஜெட் மசோதா நிறைவேற்றப்பட்டது. அதன் பிறகு பல்வேறு துறைகளின் மானிய கோரிக்கை மீது விவாதம் நடைபெற்றது.
இந்த நிலையில் சட்டசபைக்கு சனி, ஞாயிறு வழக்கமான விடுமுறை என்பதால் சபை 28-ந் தேதிக்கு (இன்று) ஒத்திவைக்கப்பட்டது. இந்த நிலையில் 2 நாட்கள் விடுமுறைக்கு பிறகு சட்டசபை கூட்டம் இன்று (திங்கட்கிழமை) பெங்களூரு விதான சவுதாவில் நடக்கிறது. துறைகளின் மானிய கோரிக்கை மீது நடைபெற்ற விவாதத்திற்கு சம்பந்தப்பட்ட துறைகளின் மந்திரிகள் பதிலளிக்கிறார்கள். அதைத்தொடர்ந்து நாளையும் (செவ்வாய்க்கிழமை), நாளை மறுநாளும் (புதன்கிழமை) 2 நாட்கள் தேர்தல் சீர்திருத்தம் குறித்த விவாதம் நடைபெற உள்ளது. இந்த விவாதத்துடன் சட்டசபை கூட்டம் 30-ந் தேதி நிறைவடைகிறது.