ஓடும் பஸ்சில் பயணியிடம் பணம் திருட்டு

ஓடும் பஸ்சில் பயணியிடம் பணம் திருடிய 2 பேரை போலீசார் கைது செய்தனர்

Update: 2022-03-27 21:23 GMT
திருச்சி
திருச்சி வடக்கு தாராநல்லூர் பகுதியைச் சேர்ந்தவர் சிவச்சந்திரன்(வயது 36). இவர் சம்பவத்தன்று திருச்சி தெப்பக்குளம் பஸ் நிலையத்தில் இருந்து வீட்டிற்கு செல்வதற்காக பஸ்சில் ஏறி பயணம் செய்து கொண்டிருந்தார். அப்போது பஸ்சில் இருந்த 2 பேர் சிவச்சந்திரன் வைத்திருந்த பணத்தை திருடினர். இதுகுறித்து கோட்டை போலீசில் அவர் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் விசாரணை நடத்தினர். அப்போது எடமலைப்பட்டிபுதூர் பகுதியைச் சேர்ந்த மகேந்திரன் மற்றும் பாலக்கரை பகுதியைச் சேர்ந்த ஒருவரும் பணத்தை திருடியது தெரியவந்தது. இதுகுறித்து கோட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து 2 பேரையும் கைது செய்தனர்.

மேலும் செய்திகள்