வீடுகளில் குடிநீர் இணைப்பு துண்டிப்பு
மானாமதுரையில் வரி கட்டாதவர்களின் வீடுகளில் குடிநீர் இணைப்பு துண்டிக்கப்பட்டது.
மானாமதுரை,
மானாமதுரை நகராட்சி நிர்வாகம் குடியிருப்புக்கள் மற்றும் வணிக வளாகங்களுக்கு என மொத்தம் 3 ஆயிரத்து 500 குடிநீர் இணைப்புக்களை வழங்கி உள்ளது. இதில் வீடுகளுக்கு மட்டுமின்றி, பல திருமண மண்டபங்கள் உள்ளிட்ட பல்வேறு வணிக நிறுவனத்தினர் குடிநீர் கட்டணத்தை முறையாக செலுத்தாமல் மொத்தம் ரூ.32 லட்சம் குடிநீர் வரி பாக்கி வைத்துள்ளனர். இதை தொடர்ந்து குடிநீர் பாக்கி ைவத்துள்ளவர்களிடம் பணம் வசூல் செய்யும் பணிகளை நகராட்சி நிர்வாகம் முடுக்கி உள்ளது. இந்த நிைலயில் 2-வது வார்டு, 3-வது வார்டு பகுதிகளில், நகராட்சி கமிஷனர் கண்ணன் உத்தரவுப்படி சுகாதார ஆய்வாளர் தங்கதுரை தலைமையில், நகராட்சி பணியாளர்கள் குடிநீர் பாக்கி வைத்துள்ளவர்களின் குடிநீர் இணைப்புக்களை துண்டித்தனர்.இது குறித்து நகராட்சி நிர்வாகம் கூறும் போது பாக்கி வைத்தவர்கள் மார்ச் 31-ந்தேதிக்குள் பணத்தை செலுத்திவிட வேண்டும் இல்லை என்றால் ரூ.2ஆயிரம் அபராதத்துடன் கட்ட நேரிடும் என எச்சரித்தனர்.