மானாமதுரை,
மதுரை மாவட்டம், செல்லூர் பகுதியைச் சேர்ந்த விக்னேஷ் தனது மகன் கார்த்திக்(வயது 5) மற்றும் குடும்பத்தினருடன் திருப்புவனம் காமாட்சி அம்மன் கோவிலுக்கு நேற்று சாமி கும்பிட சென்றார். அப்போது அங்குள்ள வைகை ஆற்றுக்கு விக்னேசும், அவரது மகன் கார்த்திக்கும் குளிக்க சென்றனர். அப்போது அங்கு பள்ளமான இடத்தில் தேங்கி கிடந்த தண்ணீரில் இருவரும் குளித்து உள்ளனர். ஆழமாக இருந்ததால் தடுமாறிய விக்னேஷ் தட்டுத்தடுமாறி வெளியே வந்து விட்டார். ஆனால் அவரது மகன் கார்த்திக் தண்ணீரில் மூழ்கி பலியாகி விட்டான்.
இது குறித்து தகவல் அறிந்ததும் தீயணைப்பு வீரர்கள் போராடி சிறுவன் உடலை மீட்டனர். சிறுவனின் உடலை பார்த்து குடும்பத்தினர் கதறி அழுதது பார்க்க பரிதாபமாக இருந்தது.