வங்கி ஊழியர் வீட்டில் திருட்டு
வங்கி ஊழியர் வீட்டில் திருட்டு பற்றி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
மதுரை,
மதுரை அய்யர்பங்களா இ.பி. காலனியை சேர்ந்தவர் விஜய் (வயது 42). வங்கி ஊழியரான இவர், கடந்த25-ந்தேதி வீட்டை பூட்டி விட்டு வெளியூர் சென்றிருந்தார். இந்தநிலையில் மீண்டும் திரும்பி வந்து பார்த்தபோது வீட்டின் முன்பக்க கதவு உடைக்கப்பட்டிருந்தது. அதிர்ச்சி அடைந்த அவர் உள்ளே சென்று பார்த்தபோது அங்கிருந்த பீரோவில் இருந்த 13 பவுன் நகை திருட்டுபோனது தெரியவந்தது. இதுகுறித்து அவர் அளித்த புகாரின் பேரில் தல்லாகுளம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.