1½ டன் ரேஷன் அரிசி வேனுடன் பறிமுதல்
காரியாபட்டி அருகே 1½ டன் ரேஷன் அரிசி வேனுடன் பறிமுதல் செய்யப்பட்டது. அத்துடன் 2 பேரை போலீசார் கைது செய்தனர்.
விருதுநகர்,
காரியாபட்டி அருகே 1½ டன் ரேஷன் அரிசி வேனுடன் பறிமுதல் செய்யப்பட்டது. அத்துடன் 2 பேரை போலீசார் கைது செய்தனர்.
வாகன சோதனை
விருதுநகர் மாவட்ட உணவுப் பொருள் கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் இன்ஸ்பெக்டர் ஆல்பின் பிரைட்மேரி தலைமையில் காரியாபட்டி பகுதியில் வாகன சோதனை மேற்கொண்டனர்.
அப்போது வடகரை சந்திப்பு பகுதியில் வந்த ஒரு வேனை நிறுத்தி சோதனை செய்தனர். அதில் தலா 35 கிலோ எடை கொண்ட 45 மூடை ரேஷன் அரிசி இருந்தது. மொத்தம் 1,575 கிலோ ரேஷன் அரிசி இருந்தது.
2 பேர் கைது
45 மூடைரேஷன் அரிசியை வேனுடன் பறிமுதல் செய்த போலீசார் இது தொடர்பாக ஐராவதநல்லூரை சேர்ந்த வேன் உரிமையாளரான சக்திவேல் (வயது 25), ரேஷன் அரிசி கடத்திய செந்தில்குமார் (48), வேன் டிரைவர் ராம்கி ஆகிய 3 பேர் மீதும் வழக்குப்பதிவு செய்தனர்.
இதையடுத்து சக்திவேல், செந்தில்குமார் ஆகியோரையும் கைது செய்தனர். வேனிலிருந்து தப்பி ஓடிய ராம்கியை வலைவீசி தேடி வருகின்றனர்.