பாதிக்கப்பட்ட இளம் பெண்ணிடம் சி.பி.சி.ஐ.டி. போலீசார் மீண்டும் ரகசிய விசாரணை
விருதுநகரில் பாலியல் பலாத்கார வழக்கில் பாதிக்கப்பட்ட இளம் பெண்ணிடம் மீண்டும் சி.பி.சி.ஐ.டி. போலீசார் தனி இடத்தில் வைத்து விசாரணை நடத்தினர்.
விருதுநகர்,
விருதுநகரில் பாலியல் பலாத்கார வழக்கில் பாதிக்கப்பட்ட இளம் பெண்ணிடம் மீண்டும் சி.பி.சி.ஐ.டி. போலீசார் தனி இடத்தில் வைத்து விசாரணை நடத்தினர்.
மீண்டும் விசாரணை
விருதுநகர் பாண்டியன் நகரை சேர்ந்த 22 வயது இளம் பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்ததாக 8 பேர் கைது செய்யப்பட்டனர். இந்த வழக்கு சி.பி.சி.ஐ.டி. போலீஸ் விசாரணைக்கு உத்தரவிடப்பட்ட நிலையில் விசாரணை அதிகாரியாக நியமிக்கப்பட்டுள்ள சி.பி.சி.ஐ.டி. போலீஸ் சூப்பிரண்டு முத்தரசி ஏற்கனவே சமூக நலத்துறை காப்பகத்தில் வைக்கப்பட்டுள்ள பாதிக்கப்பட்ட இளம் பெண்ணிடம் முதல் கட்ட விசாரணை நடத்தினார்.
இந்நிலையில் நேற்று மீண்டும் பாதிக்கப்பட்ட இளம் பெண்ணை வேறு தனி இடத்திற்கு அழைத்துச் சென்று ரகசிய விசாரணை நடத்தப்பட்டதாக கூறப்படுகிறது.
செல்போன் ஆய்வு
பாதிக்கப்பட்ட இளம் பெண்ணின் செல்போனை சைபர் கிரைம் போலீசார் ஆய்வுக்குட்படுத்திய நிலையில் அந்த செல்போனில் வேறு யாரேனும் தொடர்பு கொண்டுள்ளனரா என்பது பற்றி விசாரணை செய்யப்பட்டு வருகிறது.
வேறு யாரும் பாதிக்கப்பட்ட இளம் பெண்ணை தொடர்பு கொண்டதாக சைபர் கிரைம் போலீசாரின் அறிக்கையின் அடிப்படையில் தெரிய வரும் நிலையில் அதன் அடிப்படையில் சி.பி.சி.ஐ.டி. போலீசார் விசாரணை மேற்கொள்வார்கள் என கூறப்படுகிறது.