பல்துறை பணி விளக்க கண்காட்சி

சுதந்திர தின விழா கொண்டாட்டத்தை முன்னிட்டு விருதுநகரில் கண்காட்சி நடைபெற்று வருகிறது.

Update: 2022-03-27 19:33 GMT
விருதுநகர், 
விருதுநகர் மாவட்ட நிர்வாகம் மற்றும் செய்தி மக்கள் தொடர்புத்துறையின் சார்பில் 75-வது சுதந்திர தின கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக இந்நகர் தனியார் திருமண அரங்கில் பல்துறை பணி விளக்க கண்காட்சியும், புகைப்படக் கண்காட்சியும் நடைபெறுகிறது. கண்காட்சியில் சுதந்திரத்திற்காக பாடுபட்ட தமிழகத்தலைவர்களின் படங்களும், வாழ்க்கைக் குறிப்பும் இடம்பெற்றுள்ளது. மேலும் அரசு துறைகளின் சார்பில் செயல்படுத்தப்படும் திட்டங்கள் குறித்தும், திட்டங்களினால் பயன் பெற விண்ணப்பிக்க வேண்டிய வழிமுறைகள் குறித்தும் விளக்கமளிக்கும் வகையில் அரங்குகள் அமைக்கப்பட்டுள்ளன.போலீஸ் துறை, வனத் துறை, ஊரக வளர்ச்சித் துறை, வருவாய் பேரிடர் மேலாண்மை துறை உள்ளிட்ட பல்வேறு அரசுத் துறைகளின் சார்பில் கண்காட்சி அமைக்கப்பட்டுள்ளது. ஊரக வாழ்வாதார இயக்கத்தின் சார்பில் மகளிர் சுய உதவிக்குழுக்கள் தயாரித்த பொருட்களும் கண்காட்சி அரங்கில் இடம் பெற்றுள்ளது. இந்த கண்காட்சி வருகிற 31-ந் தேதி வரை நடைபெறுகிறது.  இதில் தினமும் மாலை மாணவ-மாணவிகளின் கலை நிகழ்ச்சிகளுக்கும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மாணவர்களும், பொது மக்களும் கண்காட்சியை கண்டு களிக்கின்றனர். 

மேலும் செய்திகள்