சாராய ஊறல் மூலப்பொருட்கள் பறிமுதல்; 4 பேர் கைது

வத்திராயிருப்பு அருகே சாராய ஊறல் மூலப்பொருட்களை பறிமுதல் செய்த போலீசார், 4 பேரை கைது ெசய்தனர்.

Update: 2022-03-27 19:24 GMT
வத்திராயிருப்பு, 
வத்திராயிருப்பு அருகே சாராய ஊறல் மூலப்பொருட்களை பறிமுதல் செய்த போலீசார், 4 பேரை கைது ெசய்தனர். 
ரோந்து பணி 
வத்திராயிருப்பு அருகே உள்ள வ.புதுப்பட்டி உடையார்பட்டி பாலம் அருகில் வத்திராயிருப்பு போலீசார் ரோந்துப்பணியில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக இரண்டு இருசக்கர வாகனங்களில் வந்த 4 ேபரை பிடித்து விசாரணை நடத்தினர். அவர்களிடம் வத்திராயிருப்பு சப்-இன்ஸ்பெக்டர் பழனிகுமார், சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் மணிகண்டன் மற்றும் போலீசார் விசாரணை நடத்தினர். விசாரணையில் அவர்கள் கூமாப்பட்டி கீழத்தெருவை சேர்ந்த சேகர் (வயது 29), இசக்கிராஜா(26), அமைச்சியார்புரம் காலனியை சேர்ந்த வெள்ளைச்சாமி (45), வ.புதுப்பட்டி அம்பேத்கர் தெருவை சேர்ந்த இஸ்ரவேல்(48) என்பதும், சாராய ஊறல் போடுவதற்காக பயன்படுத்தப்படும் மூலப்பொருட்கள் வைத்திருந்ததும் தெரியவந்தது. 
4 பேர் ைகது 
அவர்கள் 4 பேரையும் வ.புதுப்பட்டி புறக்காவல் நிலையம் கொண்டு வந்து பின்னர் மதுவிலக்கு போலீசாரிடம் ஒப்படைத்தனர். மதுவிலக்கு இன்ஸ்பெக்டர் குருவுதாய் அவர்கள் 4 பேரையும் கைது செய்தார். இதைதொடர்ந்து அவர்களிடம் விசாரணை நடைபெற்று வருகிறது. இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது. 

மேலும் செய்திகள்