40 இடங்களில் கண்காணிப்பு கேமரா

குற்ற சம்பவங்களை தடுக்க 40 இடங்களில் கண்காணிப்பு கேமரா பொருத்தப்பட்டு உள்ளது.

Update: 2022-03-27 19:20 GMT
சோழவந்தான், 
சோழவந்தான் மற்றும் இப்பகுதி சுற்றியுள்ள கிராமங்களில் குற்றச் சம்பவங்களை குறைக்க சமூக ஆர்வலர்கள் காவல் துறை மேல் அதிகாரியிடம் நடவடிக்கை எடுக்க கோரிக்கை விடுத்தனர். இதன்பேரில் போலீஸ் அதிகாரிகளின் உத்தரவின் பேரில் இப்பகுதியில் உள்ள வியாபாரிகள் மற்றும் அரிமா சங்கம், பொதுமக்களுடைய ஏற்பாட்டில் நகரில் மற்றும் தென்கரை, முள்ளிப்பள்ளம், கிராமங்களில் 40 இடங்களில் சி.சி.டி.வி. கேமரா பொருத்தப்பட்டது. இதற்கான தொடக்க விழா சோழவந்தான் காவல் நிலையத்தில் நடைபெற்றது. விழாவிற்கு மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் பாஸ்கரன் தலைமை தாங்கினார். துணைக் கண்காணிப் பாளர் பாலசுந்தரம் முன்னிலை வைத்தார். டி.ஐ.ஜி. பொன்னி சி.சி.டி.வி. கேமராக்களை இயக்கி வைத்து திட்டம் குறித்து பேசினார். இதில் இன்ஸ்பெக்டர் சிவபாலன், சப்-இன்ஸ் பெக்டர்கள் மணி, ராமர், இளங்கோ, வர்த்தகப்பிரமுகர்கள், அரிமாசங்க நிர்வாகிகள் மற்றும் போலீசார் கலந்து கொண்டனர்.

மேலும் செய்திகள்