ராமேசுவரத்துக்கு காவிரி கூட்டுக்குடிநீர் கூடுதலாக வழங்க கோரிக்கை
ராமேசுவரத்துக்கு காவிரி கூட்டுக்குடிநீர் கூடுதலாக வழங்க வேண்டும் என்று கலெக்டரிடம் நகராட்சி தலைவர் கோரிக்கை விடுத்திருந்தார்.
ராமேசுவரம்,
ராமேசுவரம் நகரசபை தலைவர் நாசர்கான் ராமநாதபுரம் மாவட்ட கலெக்டர் சங்கர்லால் குமாவத்தை நேரில் சந்தித்து கோரிக்கை மனு ஒன்றை கொடுத்தார். அந்த மனுவில் கோடை காலம் தொடங்கி உள்ளதால் ராமேசுவரம் பகுதியில் உள்ள பொதுமக்களுக்கு குடிதண்ணீர் அதிகம் தேவைப்படுவதால் காவிரி கூட்டு குடிநீர் இன்னும் அதிகமாக வழங்க வேண்டும். அதுபோல் நகரசபை மூலம் தண்ணீர் வழங்குவதற்கும் கூடுதலான தண்ணீர் வாகனம் புதிதாக அனுமதிக்க வேண்டும்.நகரின் பல்வேறு வளர்ச்சிக்கு தேவையான அனைத்து ஒத்துழைப்புகளையும் வழங்க வேண்டும் என்று கலெக்டரிடம் கோரிக்கை விடுத்தார். அப்போது உடன் நகரசபை துணைத்தலைவர் பிச்சை தட்சிணாமூர்த்தி, முன்னாள் நகரசபை தலைவர் அர்ஜுனன், மற்றும் கவுன்சிலர்கள் உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.