கிணற்றில் தவறி விழுந்த பசுமாடு உயிருடன் மீட்பு

கிணற்றில் தவறி விழுந்த பசுமாடு உயிருடன் மீட்கப்பட்டது.

Update: 2022-03-27 19:11 GMT
நொய்யல்,
நொய்யல் அருகே நடையனூர் இளங்கோ நகரை சேர்ந்தவர் கோகுல்ராஜ் (வயது 40). இவர் தனது தோட்டத்தில் பசுமாட்டை மேயவிட்டிருந்தார். அப்போது எதிர்பாராதவிதமாக பசுமாடு கிணற்றில் தவறி விழுந்தது. இதனை கண்டு அதிர்ச்சி அடைந்த கோகுல்ராஜ் அப்பகுதி மக்கள் உதவியுடன் பசுமாட்டை மீட்க முயன்றார். ஆனால் முடியவில்லை. இதுகுறித்து தகவல் அறிந்த வேலாயுதம்பாளையம் தீயணைப்பு நிலைய அலுவலர் திருமுருகன் தலைமையிலான வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று கிணற்றுக்குள் இறங்கி பசுமாட்டை உயிருடன் மீட்டு அதன் உரிமையாளரிடம் ஒப்படைத்தனர்.

மேலும் செய்திகள்