போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் உள்பட 2 பேர் மீது தாக்குதல்

போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் உள்பட 2 பேர் மீது தாக்குதல்

Update: 2022-03-27 18:55 GMT
சீர்காழி, மார்ச்.28-
சீர்காழி கரிக்குளம் முக்கூடல் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் தில்லை நடராஜன், பிரண்ட்ஸ் ஆப் போலீஸ் பிரகாஷ் ஆகிய 2 பேரும் நேற்று முன்தினம் அதிகாலையில் ரோந்து பணியில் ஈடுபட்டு கொண்டிருந்தனர். அப்போது மயிலாடுதுறையில் இருந்து சிதம்பரத்தை நோக்கி சென்ற ஒரு காரை மறித்து சோதனை செய்தனர். இதில் காரை ஓட்டி வந்த மயிலாடுதுறை சீனிவாசபுரம்  சிவலிங்கம் நகர் 2-வது குறுக்கு தெருவை சேர்ந்த ராஜேந்திரன் மகன் உதயச்சந்திரன் (வயது 22) மற்றும் காரில் இருந்த திருச்சி பீமநகர் பங்காளி தெருவை சேர்ந்த ராஜா மகன் வெற்றிச்செல்வன் (19) ஆகிய 2 பேரும் சேர்ந்து சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் தில்லை நடராஜன் மற்றும் பிரகாஷ் ஆகியோரை தகாத வார்த்தைகளால் திட்டி கைகளால் தாக்கி உள்ளனர்.
இதுகுறித்து தில்லை நடராஜன் சீர்காழி போலீசில் புகார் கொடுத்தார். அதன்பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் மணிமாறன், சப்-இன்ஸ்பெக்டர் அசோக்குமார் மற்றும் போலீசார் வழக்குப்பதிவு செய்து உதயச்சந்திரன், வெற்றிச்செல்வன் ஆகிய 2 பேரையும் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்