அ.தி.மு.க. அமைப்பு தேர்தல்
அ.தி.மு.க. அமைப்பு தேர்தல் கரூர் மாவட்டத்தில் 7 இடங்களில் நடைபெற்றது.
கரூர்,
தமிழகம் முழுவதும் அ.தி.மு.க. அமைப்பு தேர்தல் இரு கட்டங்களாக நடக்கிறது. இதில் முதல் கட்டமாக கரூர், சேலம், திருப்பூர் உள்பட 25 மாவட்டங்களுக்குட்பட்ட ஒன்றிய, நகர, பேரூர் மற்றும் பகுதி நிர்வாகிகள் ஆகிய பொறுப்புகளுக்கான அ.தி.மு.க. அமைப்பு தேர்தல் நேற்று நடைபெற்றது.
அதன்படி கரூர் மாவட்ட அ.தி.மு.க. அலுவலகத்தில் தேர்தல் பொறுப்பாளர்களான முன்னாள் அமைச்சரும், அனைத்துலக எம்.ஜி.ஆர். மன்ற பொருளாளருமான வரகூர் அ.அருணாச்சலம், பெரம்பலூர் மாவட்ட செயலாளர் ஆர்.டி.ராமச்சந்திரன், கரூர் மாவட்ட செயலாளரும், முன்னாள் போக்குவரத்துத்துறை அமைச்சருமான எம்.ஆர்.விஜயபாஸ்கர், அமைப்பு செயலாளரும், முன்னாள் அமைச்சருமான சின்னச்சாமி ஆகியோர் கலந்து கொண்டு தேர்தலை நடத்தினர். அப்போது அ.தி.மு.க. நிர்வாகிகள் விருப்பமனு அளித்தனர்.
இதில் கரூர் கிழக்கு ஒன்றியம், தாந்தோணி மேற்கு ஒன்றியம், கரூர் மத்திய வடக்கு பகுதி, கரூர் மத்திய தெற்கு பகுதி, கரூர் வடக்கு பகுதி, கரூர் தெற்கு பகுதிகளுக்கான தேர்தல் கரூர் மாவட்ட அ.தி.மு.க. அலுவலகத்திலும், கரூர் மேற்கு ஒன்றியம், க.பரமத்தி வடக்கு ஒன்றியம், க.பரமத்தி தெற்கு ஒன்றியம், க.பரமத்தி கிழக்கு ஒன்றியம், புன்செய் தோட்டக்குறிச்சி பேரூராட்சி பகுதிகளுக்கான தேர்தல் வேலாயுதம்பாளையத்தில் உள்ள தனியார் மண்டபத்திலும், தாந்தோணி கிழக்கு ஒன்றியம், புலியூர் பேரூராட்சி, உப்பிடமங்கலம் பேரூராட்சி பகுதிகளுக்கான தேர்தல் உப்பிடமங்கலம் பகுதியில் உள்ள தனியார் மண்டபத்திலும், கடவூர் வடக்கு ஒன்றியம், கடவூர் தெற்கு ஒன்றியம் பகுதிகளுக்கான தேர்தல் தரகம்பட்டி பகுதியில் உள்ள தனியார் மண்டபத்திலும் நடைபெற்றது.
அரவக்குறிச்சி கிழக்கு ஒன்றியம், அரவக்குறிச்சி மேற்கு ஒன்றியம், அரவக்குறிச்சி பேரூராட்சி பகுதிகளுக்கான தேர்தல் அரவக்குறிச்சி கிழக்கு ஒன்றிய அ.தி.மு.க. அலுவலகத்திலும், கிருஷ்ணராயபுரம் பேரூராட்சி, பழைய ஜெயங்கொண்டம் சோழபுரம் பேரூராட்சி பகுதிகளுக்கான தேர்தல் மாயனூர் பகுதியில் உள்ள தனியார் மண்டபத்திலும், குளித்தலை நகரம், குளித்தலை கிழக்கு ஒன்றியம், குளித்தலை மேற்கு ஒன்றியம், தோகைமலை கிழக்கு ஒன்றியம், தோகைமலை மேற்கு ஒன்றியம், கிருஷ்ணராயபுரம் கிழக்கு ஒன்றியம், மருதூர் பேரூராட்சி, நங்கவரம் பேருராட்சிகளுக்கான தேர்தல் அய்யர்மலையில் உள்ள தனியார் மண்டபத்திலும் நடைபெற்றது. இதில் மாவட்ட தேர்தல் பொறுப்பாளர்கள் மற்றும் மாவட்ட, நகர, ஒன்றிய, பேரூர் நிர்வாகிகள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.