சிவகங்கையில், புகைப்பட கண்காட்சி

சிவகங்கையில், புகைப்பட கண்காட்சியை ஆர்வத்துடன் பொதுமக்கள் பார்த்தனர்.

Update: 2022-03-27 18:32 GMT
சிவகங்கை, 
சிவகங்கை மாவட்ட செய்திமக்கள் தொடர்புத்துறை சார்பில் 75-வது சுதந்திர தின விழா கொண்டாட்டத்தை முன்னிட்டு சிவகங்கையில் உள்ள பழைய அரண்மனை வளாகத்தில் அரசின் அனைத்துத்துறைகளின் சார்பில் பல்துறை பணிவிளக்க கண்காட்சி அமைக்கப்பட்டு இருந்தது. இந்த கண்காட்சி தொடக்க விழா கலெக்டர் .மதுசூதன்ரெட்டி தலைமையில் நடைபெற்றது. இதில் ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் கே.ஆர்.பெரியகருப்பன் கலந்து கொண்டு கண்காட்சியை தொடங்கி வைத்து ேபசினார்.இந்த கண்காட்சியில் தேசத்தலைவர்களின் புகைப்படங்கள் இடம் பெற்று உள்ளன. மேலும் வேளாண்துறை, பள்ளிக்கல்வித்துறை, வருவாய்த்துறை, மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை, மாநில ஊரக வாழ்வாதார இயக்கம் உள்ளிட்ட 30-க்கும் மேற்பட்ட அரங்குகள் அமைக்கப்பட்டு உள்ளன.இதை தொடர்ந்து ரூ.1  கோடியே 4 லட்சத்து 23 ஆயிரத்து 57 மதிப்பிலான நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன. இந்த நலத்திட்ட உதவிகளை 302 பேருக்கு அமைச்சர் கே.ஆர்.பெரியகருப்பன் வழங்கினார்.நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அலுவலர் மணிவண்ணன், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் சிவராமன், சிவகங்கை நகர்மன்றத்தலைவர் .துரைஆன்ந்த், நகர்மன்ற துணைத்தலைவர் கார்கண்ணன், செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் .நாகராஜபூபதி, உதவி மக்கள் தொடர்பு அலுவலர் ராஜசெல்வன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

மேலும் செய்திகள்