காதலிக்க மறுத்த பள்ளி மாணவிக்கு கொலை மிரட்டல் விடுத்த தொழிலாளி போக்சோவில் கைது

காதலிக்க மறுத்த பள்ளி மாணவிக்கு கொலை மிரட்டல் விடுத்த தொழிலாளி போக்சோவில் கைது செய்யப்பட்டார்.

Update: 2022-03-27 18:31 GMT
கே.வி.குப்பம்

கே.வி.குப்பத்தை அடுத்த ஒரு கிராமத்தைச் சேர்ந்த 14 வயது சிறுமி அங்குள்ள ஒரு பள்ளியில் 9-ம் வகுப்பு படித்து வருகிறார். 24-ந்தேதி வடுகந்தாங்கல் - விரிஞ்சிபுரம் சாலையில் உள்ள ஒரு தனியார் நிறுவனம் அருகே மாணவி நடந்து சென்றபோது, அந்த வழியாக வந்த கீழ்விலாச்சூர் பகுதியைச் சேர்ந்த கோபாலின் மகனும் கூலித்தொழிலாளியுமான திருமலை (வயது 23) காதலிப்பதாகக் கூறி உள்ளார். அதற்கு பள்ளி மாணவி மறுப்பு தெரிவித்ததாகத் தெரிகிறது. இதனால் ஆத்திரம் அடைந்த திருமலை, என்னை காதலிக்க மறுத்தால் கொலை செய்து விடுவேன், என மாணவிக்கு மிரட்டல் விடுத்துள்ளார்.
இதுகுறித்து மாணவி தனது பெற்றோரிடம் கூறினார். பெற்றோர் திருமலை மீது கே.வி.குப்பம் போலீசில் புகார் செய்தனர். சப்-இன்ஸ்பெக்டர் பாஸ்கர் போக்சோ சட்டத்தின் கீழ் திருமலையை கைது செய்து விசாரித்து வருகிறார்.AM

மேலும் செய்திகள்