அரசு பஸ் மோதி முதியவர் பலி

திருப்புல்லாணி அருகே அரசு பஸ் மோதி முதியவர் பலியானார்.

Update: 2022-03-27 18:20 GMT
ராமநாதபுரம்,

திருப்புல்லாணி அருகே உள்ள பள்ளபச்சேரியை சேர்ந்தவர் முனியாண்டி (வயது 70). கூலித் தொழிலாளி. இவர் வயல்வெளியில் அறுத்துவைக்கப்பட்ட நெல் மூடைகளை காவல் காத்தார். நேற்று முன்தினம் இரவு நெல் மூடைகளை காவல் காத்துவிட்டு அதிகாலையில் எழுந்து டீ குடிப்பதற்காக சைக்கிளில் வந்து கொண்டிருந்தார். அப்போது பள்ளபச்சேரி அருகே ராமநாதபுரத்தில் இருந்து நெல்லை சென்ற அரசு பஸ் எதிர்பாராதவிதமாக முனியாண்டி சைக்கிள் மீது மோதியது. இதில் தலையில் படுகாயமடைந்த முனியாண்டி ராமநாதபுரம் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு வரும் வழியில் பரிதாபமாக பலியானார். இந்த புகாரின் பேரில் திருப்புல்லாணி போலீசார் வழக்குப்பதிவு செய்து அரசு பஸ் டிரைவர் தத்துவானந்தசாமி என்பவரை கைது செய்தன

மேலும் செய்திகள்