15 பவுன் நகை-பணம் திருட்டு

15 பவுன் நகை-பணத்தை மர்மநபர்கள் திருடி சென்றனர்.

Update: 2022-03-27 17:51 GMT
ஆலங்குடி:
ஆலங்குடி அருகேயுள்ள தவளப்பள்ளம் கிராமத்தை சேர்ந்தவர் மரியசெல்வம் (வயது 80). இவர் நேற்று  இரவு வீட்டின் கதவை பூட்டி விட்டு அருகில் வசிக்கும் தனது மகன் ஆரோக்கியராஜ் வீட்டிற்கு சென்று தூங்கியுள்ளார். அப்போது இவரது வீட்டிற்குள் புகுந்த மர்ம நபர்கள் வீட்டில் வைத்திருந்த 15 பவுன் தங்க நகை மற்றும் ரூ.30 ஆயிரத்தை திருடி சென்றனர். இதுகுறித்து மரியசெல்வம் கொடுத்த புகாரின் பேரில் ஆலங்குடி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

மேலும் செய்திகள்