பள்ளி, கல்லூரி நேரங்களில் கூடுதல் பஸ்கள் இயக்க வேண்டும்

திண்டிவனம் அரசு பணிமனையில் உள்ள கிளை மேலாளர் நாராயணமூர்த்தியை அர்ஜூணன் எம்.எல்.ஏ. நேரில் சந்தித்து பள்ளி, கல்லூரி நேரங்களில் காலை மற்றும் மாலையில் கூடுதல் பஸ்களை இயக்குமாறு தெரிவித்தார்.

Update: 2022-03-27 17:48 GMT
திண்டிவனம், 

திண்டிவனம் காந்தி சிலை அருகே கோவிந்தசாமி அரசு கலை கல்லூரி உள்ளது. இந்த கல்லூரியை சேர்ந்த மாணவர்கள் சிலர் பஸ்சில் படிக்கட்டில் தொங்கிய படி  கல்லூரிக்கு வந்து செல்கிறார்கள்.  இதை பார்த்த அர்ஜூணன் எம்.எல்.ஏ., சம்பந்தப்பட்ட மாணவர்களிடம் அறிவுரை வழங்கி, படிக்கட்டு பயணத்தை தவிர்க்குமாறு கூறினார். 

 மேலும், திண்டிவனம் அரசு பணிமனையில் உள்ள கிளை மேலாளர் நாராயணமூர்த்தியை அர்ஜூணன் எம்.எல்.ஏ. நேரில் சந்தித்து  பள்ளி, கல்லூரி நேரங்களில் காலை மற்றும் மாலையில்  கூடுதல் பஸ்களை இயக்குமாறு தெரிவித்தார். 

அதேபோன்று, கிளை மேலாளர் நாராயணமூர்த்தி,  திண்டிவனம் பணிமனையில் உள்ள ஆழ்துளை கிணற்றை ஆழப்படுத்தவும், கழிப்பறை வசதியை மேம்படுத்தி தருமாறும் அர்ஜூணன் எம்.எல்.ஏ.விடம் கோரிக்கை விடுத்தார். அப்போது,  மரக்காணம் மேற்கு ஒன்றிய செயலாளர் நடராஜன் உள்பட அ.தி.மு.க. நிர்வாகிகள் பலர் உடன் இருந்தனர்.

மேலும் செய்திகள்