அறந்தாங்கி ஆதிபராசக்தி கோவில் கும்பாபிஷேகம் பங்காரு அடிகளார் நடத்தி வைத்தார்

ஆதிபராசக்தி கோவில் கும்பாபிஷேகம் நடைபெற்றது.

Update: 2022-03-27 17:44 GMT
அறந்தாங்கி:
அறந்தாங்கியில் ஆதிபராசக்தி சித்தர் சக்தி பீடம் புதிதாக கட்டப்பட்டது. இதையடுத்து சக்தி பீடத்தில் கும்பாபிஷேகம் இன்று நடைபெற்றது. இதைதொடர்ந்து விழாவில் மேல்மருவத்தூர் ஆன்மிக குரு அருள்திரு பங்காரு அடிகளார் கலந்து கொண்டு கோபுர கலசத்திற்கு புனிதநீர் ஊற்றி கும்பாபிஷேகம் நடத்தி வைத்தார். பின்னர் பல்வேறு திருஷ்டி எடுக்கப்பட்டது. தொடர்ந்து கருவறையில் அமைக்கப்பட்டுள்ள அன்னை ஆதிபராசக்தியின் சிலைக்கு ஆன்மிக இயக்க தலைவர் லட்சுமி பங்காரு அடிகளார் அபிஷேகம் செய்து வைத்தார். மேலும் சமுதாயப்பணியாக ரூ.5 லட்சத்தில் நலத்திட்டங்கள் வழங்கப்பட்டது. இதில் கொரோனா நோயினால் உயிரிழந்த 2 குடும்ப வாரிசுகளுக்கு தலா ரூ.1 லட்சம் வீதம் வழங்கப்பட்டது. 1 இலவச திருமணமும், 32 மோட்டார் பொருத்திய தையல் எந்திரம், 5 சைக்கிள்கள், சலவை பெட்டி 3, மடிக்கணினி 1, மாற்றுத்திறனாளிக்கு மூன்றுசக்கர சைக்கிள் போன்ற நலத்திட்ட உதவிகளை ஆன்மிக குரு அருள்திரு பங்காரு அடிகளார் வழங்கினார். விழாவில் அமைச்சர்கள் ரகுபதி, மெய்யநாதன், எம்.எல்.ஏ. ராமச்சந்திரன், ஆன்மிக இயக்க துணைத்தலைவர் ஸ்ரீதேவி ரமேஷ், அறங்காவலர் உமாதேவி ஜெய்கணேஷ், ஆதிபராசக்தி மருத்துவமனை மேலாண்மை இயக்குனர் ரமேஷ், வக்கீல் அகத்தியன் உள்பட பலர் கலந்து கொண்டனர். கும்பாபிஷேகத்திற்கான ஏற்பாடுகளை புதுக்கோட்டை மாவட்ட மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி ஆன்மிக இயக்க தலைவர் மற்றும் செவ்வாடை தொண்டர்கள் செய்திருந்தனர். விழாவில் திண்டிவனம், விக்கிரவாண்டி, உளுந்தூர்பேட்டை, ேவப்பூர் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். 

மேலும் செய்திகள்