தொழிற்சங்கங்கள் வேலை நிறுத்தத்திற்கு எஸ்.டி.பி.ஐ. கட்சி ஆதரவு
தொழிற்சங்கங்கள் வேலை நிறுத்தத்திற்கு எஸ்.டி.பி.ஐ. கட்சி ஆதரவு அளிப்பதாக மாநில தலைவர் நெல்லை முபாரக் தெரிவித்துள்ளார்.
கோவை
கோவை எஸ்.டி.பி.ஐ. கட்சி அலுவலகத்தில் மாநில தலைவர் நெல்லை முபாரக் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-
தமிழ்நாடு அரசு பணியாளர் குரூப்-2 தேர்வுக்கான விண்ணப்பத்தில் கேட்கப்பட்ட துணை கேள்வியில் மதம் சம்பந்தமான கேள்வி கேட்கப்பட்டு உள்ளது அதனை நீக்க வேண்டும். சென்னை. ஐ.ஐ.டி.யில் மேற்குவங்காளத்தை சேர்ந்த பட்டியல் இன மாணவி ஒருவர் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
தமிழக அரசு இதுதொடர்பாக சி.பி.சி.ஐ.டி. விசாரணை நடத்த வேண்டும். மத்திய அரசின் தொழிலாளர் விரோத போக்கை கண்டித்தும், பொதுத்துறை நிறுவனங்களை தனியார் மயமாக்க கூடாது, தொழிலாளர்களுக்கு விரோத சட்டங்களை திரும்ப பெற வேண்டும்,
பெட்ரோலிய பொருட்கள் மீதான விலை உயர்வை ரத்து செய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட 14 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி இன்று (திங்கட்கிழமை) மற்றும் நாளை (செவ்வாய்க்கிழமை) நடைபெறும் அனைத்து தொழிற்சங்கங்களின் நாடு தழுவிய வேலை நிறுத்த போராட்டத்திற்கு எஸ்.டி.பி.ஐ. கட்சி முழு ஆதரவு அளிக்கிறது. இவ்வாறு அவர் கூறினார்.
அப்போது, எஸ்.டிபி.ஐ. கட்சியின் மாநில செயற்குழு உறுப்பினர்கள் அபுதாஹிர், கோவை மண்டல தலைவர் ராஜா உசேன், கோவை மத்திய மாவட்ட தலைவர் முஸ்தபா, செய்தி தொடர்பாளர் மன்சூர் உள்பட பலர் உடனிருந்தனர்.