வாணியம்பாடி அருகே வழிப்பறியில் ஈடுபட்ட 4 பேர் கைது
வாணியம்பாடி அருகே வழிப்பறியில் ஈடுபட்ட 4 பேர் கைது செய்யப்பட்டனர்.
வாணியம்பாடி
திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி நியூடவுன் பகுதியை சேர்ந்தவர் ஆசிப் உபேத் (வயது 20). பட்டதாரி. இவர் ஊசி தோப்பு பகுதிக்கு மோட்டார் சைக்கிளில் சென்றுள்ளார். அங்கு ஒரு இடத்தில் மோட்டார்சைக்கிளை நிறுத்திவிட்டு சிறுநீர் கழிக்கச் சென்றுவிட்டு திரும்பி வந்து பார்த்தபோது தனது வாகனத்தில் வைத்திருந்த செல்போன், பணம் ஆகியவற்றை மர்ம நபர்கள் திருடி சென்றது தெரியவந்தது.
இதுகுறித்து வாணியம்பாடி தாலுகா போலீசில் புகார் அளித்தார். புகாரின்பேரில் விசாரணை செய்த போலீசார், ஊசி தோப்பு பகுதியில் ரோந்து செல்லும் போது சந்தேகத்திற்கிடமாக ஒரு பகுதியில் அமர்ந்திருந்த நான்கு பேரை பிடித்து விசாரணை நடத்தினர். விசாரணையில் அவர்கள் கத்தியுடன் அங்கு அமர்ந்திருந்து அவ்வழியே வருவோரை மிரட்டி செல்போன் மற்றும் பணம் பறிப்பது தெரியவந்தது.
இதுதொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து வாணியம்பாடி பெருமாள்பேட்டையை சேர்ந்த கண்ணன் மகன் தேவமூர்த்தி (20), இந்திரா நகர் கிருஷ்ணன் மகன் சுதாகர் (20), உமர் நகர் ரவிராவ் மகன் லோகேஷ்வர் ராவ் (23), நேதாஜிநகர் மெயின் ரோடு பகுதியைச் சேர்ந்த பிரசாந்த் (24) ஆகிய 4 பேரையும் கைது செய்தனர்.