தஞ்சையில் இருந்து கோவத்தகுடி கிராமத்திற்கு பஸ் வசதி
தஞ்சையில் இருந்து கோவத்தகுடி கிராமத்திற்கு பஸ் வசதி நடைபெற்றது.
மெலட்டூர்:
பாபநாசம் தாலுகா கோவத்தகுடி கிராமத்திற்கு தஞ்சையில் இருந்து மெலட்டூர் வழியாக கோவத்தகுடி வரை நகர பஸ் மற்றும் தஞ்சையில் இருந்து மெலட்டூர், திருக்கருகாவூர் வழியாக கும்பகோணம் வரை புறநகர் பஸ் தொடக்க நிகழ்ச்சி மெலட்டூரில் நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு ஜவாஹிருல்லா எம்.எல்.ஏ. தலைமை தாங்கினார். அம்மாப்பேட்டை ஒன்றியக்குழு தலைவர் கே.வீ.கலைச்செல்வன், மெலட்டூர் பேரூராட்சி தலைவர் இலக்கியாபட்டாபிராமன், கோவத்தகுடி ஊராட்சி மன்ற தலைவர் கிருஷ்ணவேணி கருப்பையன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். நிகழ்ச்சியில் தஞ்ைசயில் இருந்து கோவத்தகுடிக்கு நகர பஸ் வசதியை ராமலிங்கம் எம்.பி. கொடியசைத்து தொடங்கி வைத்தார். இதில் அம்மாப்பேட்டை ஒன்றியக்குழு துணைத்தலைவர் தங்கமணிசுரேஷ், பேரூராட்சி துணை தலைவர் பொன்னழகுசீனு, அரசு போக்குவரத்து கழக தஞ்சை கோட்ட மேலாளர் செந்தில்குமார் மற்றும் மாவட்ட, ஒன்றிய நிர்வாகிகள், உள்ளாட்சி பிரதிநிதிகள், கிராமமக்கள் கலந்து கொண்டனர்.