டிப்ளமோ மாணவர் தூக்குப்போட்டு தற்கொலை

சுவாமிமலை அருகே தாய் திட்டியதால் டிப்ளமோ மாணவர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Update: 2022-03-27 16:42 GMT
கபிஸ்தலம்:
சுவாமிமலை அருகே தாய் திட்டியதால்  டிப்ளமோ மாணவர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். 
டிப்ளமோ மாணவர் 
தஞ்சை மாவட்டம் சுவாமிமலை அருகே உள்ள மேலக்காவேரி தங்கம் நகரை சேர்ந்தவர் முகமது ரபிக். ஆட்டோ டிரைவர். இவரது மனைவி பரக்கத் நிஷா. இவர்களது மகன் ஹாலிக்(வயது21). இவர் டிப்ளமோ படித்துவிட்டு வீட்டில் இருந்துள்ளார். அப்போது வீட்டில் தினமும் செல்ேபானை பார்த்து வந்துள்ளார். இதனை பார்த்த பரக்கத் நிஷா, ஹாலிக்கை திட்டி கண்டித்துள்ளார். 
தூக்குப்போட்டு தற்கொலை
இந்தநிலையில் நேற்று பரக்கத் நிஷா, ஹாலிக்கை சாப்பிட சொன்னார். ஆனால் அவர் கோபப்பட்டு ஒரு அறைக்குள் சென்று தாழ்ப்பாள் போட்டுக்கொண்டார். நீண்ட நேரமாகியும் அவர் வெளியே வராததால் அருகில் உள்ளவர்கள் கதவை உடைத்து உள்ளே சென்றனர். அங்கு ஹாலிக் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது. 
விசாரணை 
தகவல் அறிந்ததும் சுவாமிமலை போலீஸ் இன்ஸ்பெக்டர் மகாலட்சுமி மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து ஹாலிக் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக  கும்பகோணம் மாவட்ட அரசு தலைமை ஆஸ்பத்திரிக்கு அனுப்பிவைத்தனர். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். தாய் திட்டியதால் டிப்ளமோ மாணவர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. 
----

மேலும் செய்திகள்