மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி அனுமதியின்றி இடிப்பு

கம்பம் அருகே மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி அனுமதியின்றி இடிக்கப்பட்டதாக பொதுமக்கள் புகார் தெரிவித்தனர்.

Update: 2022-03-27 16:20 GMT
கம்பம்:
கம்பம் அருகே குள்ளப்பகவுண்டன்பட்டி ஊராட்சிக்கு உட்பட்ட 9-வது வார்டு பகுதிகளான வெட்டுக்காடு, இந்திராநகர், ஊமையன்தொழு ஆகிய பகுதிகளில் சுமார் 130 குடும்பங்கள் வசித்து வருகின்றன. இவர்களுக்கு குடிநீர் வழங்குவதற்காக 2 மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி அமைக்கப்பட்டுள்ளன.
தற்போது இந்த 2 தொட்டிகளிலும் தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியம் சார்பில் பராமரிப்பு பணி நடந்து வருகிறது. இந்தநிலையில் கடந்த 2 நாட்களுக்கு முன்பு வெட்டுக்காடு பகுதியில் இருந்த மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியை நள்ளிரவில் மர்மநபர்கள் அனுமதியின்றி இடித்து சேதப்படுத்தினர். 
இதனால் அதிர்ச்சி அடைந்த பொதுமக்கள், இதுகுறித்து ஊராட்சி நிர்வாகத்திடம் புகார் அளித்தனர். ஆனால் ஊராட்சி நிர்வாகம் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று கூறப்படுகிறது. இதைத்தொடர்ந்து மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியை சேதப்படுத்திய நபர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மாவட்ட நிர்வாகத்திற்கு பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

மேலும் செய்திகள்