விஷம் குடித்த விவசாயி சிகிச்சை பலனின்றி சாவு
விஷம் குடித்த விவசாயி சிகிச்சை பலனின்றி சாவு
பொள்ளாச்சி
கோவை மாவட்டம் பொள்ளாச்சி அருகே உள்ள சீலக்காம்பட்டியை சேர்ந்தவர் கனகராஜ்(வயது 60). விவசாயி. இவருடைய மனைவி சுமதி(45). இந்த நிலையில் கனகராஜூக்கு அதே பகுதியில் 18 ஏக்கர் விவசாய நிலம் இருந்தது. அந்த நிலத்தை விற்க, அதே பகுதியை சேர்ந்த தம்பு என்ற நந்தகோபாலிடம் ஒரு ஏக்கர் ரூ.18 லட்சத்து 50 ஆயிரம் என்ற வகையில் விலை பேசி முடித்தார். பின்னர் நிலத்தை கிரையம் செய்வதற்கு அதன் மீது ஏதாவது வில்லங்கம் இருக்கிறதா? என்று வக்கீலிடம் ஆலோசனை பெறுவதற்கு அதன் அசல் பத்திரங்களை நந்தகோபால் பெற்று சென்றார். தொடர்ந்து சில நாட்கள் கழித்து கிரயத்திற்கு தயாராகும் வரை வைத்துக்கொள்ளும்படி கூறி முன்பணமாக ரூ.5 லட்சத்தை அவர், கனகராஜிடம் கொடுத்தார். ஆனால் பத்திரங்களை திரும்ப கொடுக்காமல் காலம் தாழ்த்தி வந்தார். இதையடுத்து கடந்த 23-ந் தேதி கனகராஜ், சுமதி ஆகியோர் நந்தகோபாலின் வீட்டிற்கு சென்று பத்திரத்தை கேட்டனர். ஆனால் பத்திரத்தை நந்தகோபால் தர மறுத்தார்.
இதனால் விரக்தி அடைந்த சுமதி, கனகராஜ் ஆகியோர் அவரது வீட்டில் வைத்து விஷம் குடித்தனர். உடனே அவர்களை அக்கம்பக்கத்தினர் மீட்டு கோலார்பட்டி அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு சுமதியை பரிசோதனை செய்த டாக்டர்கள் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். மேலும் கனகராஜூக்கு கோவை அரசு ஆஸ்பத்திரியில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இந்த நிலையில் இன்று சிகிச்சை பலனின்றி அவரும் பரிதாபமாக உயிரிழந்தார். இந்த சம்பவம் குறித்து கோமங்கலம் போலீசார் தற்கொலைக்கு தூண்டியதாக நந்தகோபால் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.