அம்மாபட்டி குளத்தில் ஆக்கிரமிப்பை அகற்ற வேண்டு

அம்மாபட்டி குளத்தில் ஆக்கிரமிப்பை அகற்ற வேண்டும்

Update: 2022-03-27 12:15 GMT
ர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
அம்மாபட்டி குளம்
இயற்கை அளிக்கின்ற விலைமதிப்பற்ற மழைநீரை தேக்கி வைத்து நிலத்தடி நீர் இருப்பை உயர்த்துவதில் நீராதாரங்கள் முக்கிய பங்கு வகிக்கிறது. ஆனால் நீராதாரங்கள் மற்றும் அவற்றுக்கு நீர்வரத்தை அளிக்க கூடிய நீர்வழித்தடங்கள் உள்ளிட்டவை முறையான பராமரிப்பு முழுமையாக தூர்வாரல் இல்லாததால் படிப்படியாக நீர்த்தேக்க பரப்பளவை இழந்து வருகின்றன. இதனால் அதிகப்படியான நீர் வரத்தை தேக்கி வைத்து குடிநீர் மற்றும் உணவை உற்பத்தி செய்யக் கூடிய சாகுபடி பணிகளுக்கு பயன்படுத்த முடியாத சூழல் உள்ளது.
இந்த நிலையில் நீர்நிலைகளில் ஏற்படுத்தப்பட்ட ஆக்கிரமிப்புகளை அகற்றுவதற்கு ஐகோர்ட் உத்தரவிட்டது. அதைத்தொடர்ந்து கடந்த சில நாட்களாக தமிழகம் முழுவதும் ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டு வருகிறது.இது வரவேற்கத்தக்க ஒன்றாகும்.  ஆனால் ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்ட நீர்வழித்தடங்களை முழுமையாக தூர்வாரி கையகப்படுத்த முன்வர வேண்டும். அத்துடன் குளங்களையும் தூர்வாரி ஆழப்படுத்த வேண்டும். அப்போதுதான் ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டதற்கான நோக்கமும் நிறைவேறும் நீராதாரங்களில் அதிகப்படியான தண்ணீரை தேக்க முடியும் நிலத்தடி நீர்இருப்பையும் உயர்த்த முடியும்.
அகற்ற வேண்டும்
ஆனால் ஒரு சிலர் குளங்களை ஆக்கிரமித்து மேடாக்கி குளத்திற்குள் வயலை உருவாக்கி வருகின்றனர்.  இதனால் குளங்களுக்கு நேரடியாக தண்ணீர் செல்ல முடியாத சூழல் உள்ளது. அந்த வகையில் உடுமலையை அடுத்த அம்மாபட்டி குளத்தில் தெற்கு பகுதியை சிலர் ஆக்கிரமித்து வயல் போன்ற ஒரு அமைப்பை ஏற்படுத்தி உள்ளனர். இதனால் குளத்தின் நீர்தேக்க பரப்பளவு குறைந்து வருகிறது.
 இது குறித்து பொதுப்பணித்துறையினரும் கண்டுகொள்வதில்லை. இதனால் நாளடைவில் குளம் முழுவதும் சமதளப்பரப்பு போன்று மாறக்கூடிய சூழல் நிலவுகிறது. ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டு வருகின்ற தற்போதைய சூழலில் இதுபோன்று குளம் குட்டை உள்ளிட்ட நீர்நிலைகளுக்குள் ஏற்படுத்தப்பட்டுள்ள ஆக்கிரமிப்புகளையும் அகற்றி அதனை தூர்வார வேண்டும். இவ்வாறு தெரிவித்தனர்.

மேலும் செய்திகள்