முன்னாள் துணை ராணுவ வீரர்களுக்கு கல்வி, வேலைவாய்ப்பில் 5 சதவீத இட ஒதுக்கீடு வழங்க வேண்டும். சங்க கூட்டத்தில் கோரிக்கை
முன்னாள் துணை ராணுவ வீரர்களுக்கு கல்வி, வேலைவாய்ப்பில் 5 சதவீத இட ஒதுக்கீடு வழங்க வேண்டும் என்று சங்கக் கூட்டத்தில் வலியுறுத்தினர்.
திருப்பத்தூர்
திருப்பத்தூர் மாவட்ட முன்னாள் துணை ராணுவ வீரர்கள் சங்க ஆலோசனை கூட்டம் திருப்புத்தூரில் நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு முன்னாள் துணை ராணுவ வீரர்கள் சங்க தலைவர் சுந்தர்ராஜன் தலைமை வகித்தார். தலைவர் சி.தருமன் முன்னிலை வகித்தார். பொதுச்செயலாளர் ஜெயராமன், பொருளாளர் நாதமுனி ஆகியோர் பேசினார்கள்.
கூட்டத்தில் மத்திய, மாநில அரசுகள், முன்னாள் துணை ராணுவத்தினருக்கும், அவரது வாரிசுகளுக்கும் வேலைவாய்ப்பு, கல்வியில் 5 சதவீத இட ஒதுக்கீடு வழங்க வேண்டும், மருத்துவத்திற்கு முன்னுரிமை அளிக்க வேண்டும், முன்னாள் ராணுவத்தினருக்கு கலெக்டர் தலைமையில் குறைதீர்க்கும் கூட்டம் நடைபெறுவது போல், துணை ராணுவ வீரர்கள் குறைதீர்க்கும் கூட்டம் நடத்த வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினார்கள். மக்கள் தொடர்பு அலுவலர் சரவணன், கேசவன் உள்பட ஏராளமான கலந்து கொண்டனர். முடிவில் இணைச்செயலாளர் சேகர் நன்றி கூறினார்.