தெருவிளக்கு அமைக்க வேண்டும்

தெருவிளக்கு அமைக்க வேண்டும்

Update: 2022-03-27 11:55 GMT
குன்னத்தூர் அருகே வெள்ளியம்பதி ஊராட்சி அன்னை செல்லம்மா நகரில் 50க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகிறார்கள். இப்பகுதியில் ரோடு மிகவும் மோசமான நிலையில் இருந்தது. ஆகவே தற்போது தார் ரோடு போடும் பணி நடைபெற்று வருகிறது. மேலும் இப்பகுதியில் ஒரு சில வீதிகளில் மட்டுமே தெரு விளக்கு உள்ளது. பெரும்பாலான வீதிகளில் தெருவிளக்கு இல்லை. இரவு நேரங்களில் இப்பகுதி பொது மக்கள் பெரும் அவதிப்பட்டு வருகிறார்கள். இப்பகுதியில் தெருவிளக்கு அமைத்து கொடுக்க வேண்டும் சமூக ஆர்வலர்களும் பொதுமக்களும் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

மேலும் செய்திகள்