ரூ3 கோடியே 14 லட்சம் நகை கடன் தள்ளுபடி

ரூ3 கோடியே 14 லட்சம் நகை கடன் தள்ளுபடி

Update: 2022-03-27 11:45 GMT
வெள்ளகோவிலில் ரூ.3 கோடியே  14  லட்சம் நகைக்கடன் தள்ளுபடிசான்றிதழை அமைச்சர் மு.பெ.சாமிநாதன் வழங்கினார்.
நகைக்கடன் தள்ளுபடி
வெள்ளகோவிலில் 
 வெள்ளகோவிலில் உள்ள ஒரு தனியார் திருமண மண்டபத்தில் நகை கடன் தள்ளுபடிகான சான்றிதழ் வழங்கும் விழா நடைபெற்றது. விழாவில் அமைச்சர் மு.பெ.சாமிநாதன் கலந்துகொண்டு நகைக்கடன் தள்ளுபடிசான்றிதழ்களை வழங்கினார். அதன்படி வெள்ளகோவில், ஆலம்பாளையம், மூத்தாம்பாளையம், முத்தூர் ஆகிய தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கி கடன் சங்கம் மற்றும் வெள்ளகோவில் கூட்டுறவு தொடக்க வேளாண்மை மற்றும் ஊரக வளர்ச்சி வங்கியில் கடன் பொற்றிருந்த தகுதியுடைய 787 நபர்களுக்கு ரூ. 3 கோடியே 14 லட்சம் மதிப்பிலான நகை கடன் தள்ளுபடிகான சான்றிதழ் வழங்கப்பட்டது.
விழாவில் அமைச்சர் மு.பெ. சாமிநாதன் பேசியதாவது  முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் மக்களின் வளர்ச்சிக்கான பல்வேறு திட்டங்களை அறிவித்து செயல்படுத்தி வருகிறார். குறிப்பாக ஊராட்சி பகுதிகளில் மக்களுக்கு தேவையான அடிப்படை வசதிகளை விரைந்து முடிக்க வேண்டும் என அறிவுறுத்தியுள்ளார். கடந்த 10 மாதங்களில் பல்வேறு வாக்குறுதிகளை நிறைவேற்றி உள்ளார். தேர்தல் அறிக்கையில் அளித்திருக்கும் வாக்குறுதியை நிறைவேற்றும் வகையில் மக்களின் நலன் கருதி ஆவின் பால் விலை குறைக்கப்பட்டுள்ளது. மேலும் மக்களை தேடி மருத்துவம் திட்டம் பெண்களுக்கு பஸ்களில் இலவச பயணம். இன்னுயிர் காப்போம் நம்மை காக்கும் 48 என்ற திட்டம், போன்ற எண்ணற்ற திட்டங்களை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் நிறைவேற்றி வருகின்றார், எனவே தொடர்ந்து நீங்கள் ஆதரவு கொடுக்க வேண்டும்.
இவ்வாறு அவர் பேசினார். 

மேலும் செய்திகள்