மகளிருக்கான இலவச மருத்துவ முகாம்
பெரம்பலூரில் மகளிருக்கான இலவச மருத்துவ முகாம் நடந்தது.
பெரம்பலூர்:
உலக மகளிர் தினத்தை முன்னிட்டு இந்திய மருத்துவ சங்கத்தின் பெரம்பலூர் கிளை மற்றும் அதன் மகளிர் மருத்துவ பிரிவு, திருச்சி காவேரி மருத்துவமனை ஆகியவை இணைந்து மகளிருக்கான இலவச மருத்துவ முகாமினை பெரம்பலூர் நகராட்சி அலுவலக வளாகத்தில் நேற்று நடத்தியது. முகாமிற்கு இந்திய மருத்துவ சங்கத்தின் பெரம்பலூர் கிளை தலைவர் டாக்டர் வல்லபன் தலைமை தாங்கினார். இதில் சிறப்பு அழைப்பாளராக தி.மு.க. துணை பொதுச் செயலாளர் ஆ.ராசா எம்.பி. கலந்து கொண்டு மூத்த பெண் டாக்டர்களுக்கு சால்வை அணிவித்து, முகாமினை தொடங்கி வைத்து பேசினார். இதில் அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர், பிரபாகரன் எம்.எல்.ஏ., நகராட்சி தலைவர் அம்பிகா ராஜேந்திரன், ஆணையர் குமரிமன்னன், வேப்பூர் ஊராட்சி ஒன்றியக்குழு தலைவர் பிரபா செல்லப்பிள்ளை உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். முகாமில் பெண்களுக்கு ஆரம்ப நிலை மார்பக புற்றுநோய் கண்டறிதலுக்கான பரிசோதனை உள்ளிட்ட பல்வேறு வகையான பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டது. முன்னதாக சங்கத்தின் மகளிர் பிரிவு செயலாளர் டாக்டர் சுமதி செங்குட்டுவன் வரவேற்றார். முடிவில் இணை செயலாளர் டாக்டர் ஜெயலட்சுமி நன்றி கூறினார்.