சுயேச்சை கவுன்சிலர் தி.மு.க.வில் இணைந்தார்

பெரம்பலூர் நகராட்சியில் சுயேச்சை கவுன்சிலர் தி.மு.க.வில் இணைந்தார்.

Update: 2022-03-26 21:35 GMT
பெரம்பலூர்:
பெரம்பலூர் நகராட்சியில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் 10-வது வார்டில் தி.மு.க. கூட்டணி கட்சியான ம.தி.மு.க. வேட்பாளர் ஜெயசீலனை எதிர்த்து சுயேச்சையாக போட்டியிட்ட மணிவேல் வெற்றி பெற்று கவுன்சிலர் ஆனார். இந்த நிலையில் கவுன்சிலர் மணிவேல் நேற்று பெரம்பலூர் நகராட்சி அலுவலகத்தில் ஒரு விழாவில் கலந்து கொண்ட தி.மு.க. துணை பொதுச் செயலாளர் ஆ.ராசா எம்.பியை சந்தித்து, அவர் முன்னிலையில் தன்னை தி.மு.க.வில் இணைத்து கொண்டார்.

மேலும் செய்திகள்