தி.மு.க. பொதுக்கூட்டம்

தி.மு.க. பொதுக்கூட்டம் நடந்தது.

Update: 2022-03-26 21:34 GMT
அரியலூர்:
அரியலூரில் மாவட்ட தி.மு.க. சார்பில் பஸ் நிலையம் எதிரே முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் 68-வது பிறந்த நாள் விழா மற்றும் பட்ஜெட் விளக்க பொதுக்கூட்டம் நடந்தது. கூட்டத்திற்கு மாவட்ட செயலாளரும், தமிழக பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சருமான சிவசங்கர் தலைமை தாங்கினார். நகர செயலாளர் முருகேசன் வரவேற்று பேசினார். ஜெயங்கொண்டம் எம்.எல்.ஏ. கண்ணன் முன்னிலை வகித்தார். தலைமை கழக பேச்சாளர் நெல்லிக்குப்பம் புகழேந்தி, பட்ஜெட் பற்றி விளக்கிப் பேசினார். கூட்டத்தில் கட்சியினர், நிர்வாகிகள் உள்பட பலர் கலந்து கொண்டனர். முடிவில் ஒன்றிய செயலாளர் அறிவழகன் நன்றி கூறினார்.

மேலும் செய்திகள்