எல்லை பாதுகாப்பு படை வீராங்கனைகளுக்கு கன்னியாகுமரியில் வரவேற்பு
கன்னியாகுமரியில் எல்லை பாதுகாப்பு படை வீராங்கனைகளுக்கு வரவேற்பு அளிக்கப்பட்டது.
கன்னியாகுமரி,
கன்னியாகுமரியில் எல்லை பாதுகாப்பு படை வீராங்கனைகளுக்கு வரவேற்பு அளிக்கப்பட்டது.
வீராங்கனைகள்
உலக மகளிர் தினத்தை முன்னிட்டு கடந்த 8-ந் தேதி எல்லை பாதுகாப்பு படையை சேர்ந்த வீராங்கனைகள் விழிப்புணர்வு பேரணியாக டெல்லியில் இருந்து மோட்டார் சைக்கிளில் புறப்பட்டனர்.
35 வீராங்கனைகள் பங்கேற்ற பேரணி பல்வேறு மாநிலங்கள் வழியாக சென்று இறுதியாக நேற்று மாலை கன்னியாகுமரிக்கு வந்தடைந்தது. இந்த பேரணியை எல்லை பாதுகாப்பு படை வீரர்கள் மேள, தாளத்துடன் வரவேற்றனர். பின்னர் அனைவரும் கடற்கரையில் குழு புகைப்படம் எடுத்து கொண்டனர்.