மாநில அளவிலான சிலம்பம் போட்டி
மதுரையில் மாநில அளவிலான சிலம்பம் போட்டி நடந்தது.
மதுரை,
மதுரை பசுமலையில் உள்ள மன்னர் திருமலை நாயக்கர் கல்லூரியில் மாநில அளவிலான சிலம்பம் போட்டி கோவிந்தராஜ் கலைமேம்பாட்டு நிறுவனம், மாடக்குளம் ஏ.எக்ஸ்.என். சிலம்பம் அகாடமி சார்பில் நடந்தது. இதில் மதுரை புதுவிளாங்குடி ஏ.பி.கே. சிலம்பம் பள்ளி உள்பட பல்வேறு பகுதிகளை சேர்ந்த சிலம்பம் பள்ளி மாணவ- மாணவிகள் பங்கேற்று தங்கள் தனித்திறனை வெளிப் படுத்தினர். சிலம்பம் போட்டியில் வெற்றிபெற்ற மாணவ- மாணவிகளுக்கு பதக்கம், கேடயம், சான்றிதழ் வழங்கி பாராட்டு தெரிவிக்கப்பட்டது.