ஆர்ப்பாட்டம்

விருதுநகரில் பா.ம.க.வினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

Update: 2022-03-26 20:08 GMT
விருதுநகர்,
விருதுநகரில் இளம்பெண் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட வழக்கு தொடர்பாக சி.பி.சி.ஐ.டி. போலீசார் வழக்கு விசாரணையை தீவிரப்படுத்தி விரைந்து குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்து குற்றவாளிகளுக்கு கடும் தண்டனை பெற்றுத்தர வலியுறுத்தி பா.ம.க. சார்பில் இந்நகர் பழைய பஸ் நிலையம் அருகே ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. விருதுநகர் மத்திய மாவட்ட செயலாளர் டேனியல் தலைமையில் நடந்த இந்த ஆர்ப்பாட்டத்தில் மாநில பொருளாளர் திலகபாமா, ராமநாதபுரம் கிழக்கு மாவட்ட செயலாளர் ஹக்கீம், தெற்கு மாவட்ட செயலாளர் சிவகுமார் மற்றும் பலர் கலந்து கொண்டனர். 

மேலும் செய்திகள்