விபத்தில் அரசு பள்ளி ஆசிரியர் பலி:ரிக் வண்டி டிரைவருக்கு 15 மாதம் சிறை
விபத்தில் அரசு பள்ளி ஆசிரியர் பலியான வழக்கில் ரிக் வண்டி டிரைவருக்கு 15 மாதம் சிறை தண்டனை விதித்து கோர்ட்டு தீர்ப்பு கூறி உள்ளது.
சங்ககிரி:
நாமக்கல் மாவட்டம் சேந்தமங்கலம் தாலுகா கொண்டப்பநாயக்கன்பட்டியை சேர்ந்தவர் சரவணன் (வயது 46). இவர் நாமக்கல்லில் உள்ள கோட்டை அரசு நடுநிலைப்பள்ளியில் ஆசிரியராக வேலை பார்த்து வந்தார். கடந்த 2016-ம் ஆண்டு மே மாதம் 23-ந் தேதி தனது மூத்த மகன் மற்றும் நண்பருடன் கோவைக்கு காரில் சென்று கொண்டிருந்தார். வழியில் சங்ககிரி அருகே மேக்காடு பகுதியில் எதிரே வந்த ரிக் வண்டி கார் மீது மோதியது. இதில் சரவணன் பலியானார். இந்த வழக்கு சங்ககிரி குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் நடந்து வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி சுந்தரராஜன் ரிக் வண்டி டிரைவர் அமலுக்கு (26) 15 மாத சிறையும், ரூ.3 ஆயிரம் அபராதமும் விதித்தார்.