கொங்கணாபுரத்தில் ரூ.1¼ கோடிக்கு பருத்தி ஏலம்

கொங்கணாபுரத்தில் ரூ.1¼ கோடிக்கு பருத்தி ஏலம் போனது.

Update: 2022-03-26 19:49 GMT
எடப்பாடி:
கொங்கணாபுரத்தில் செயல்பட்டு வரும் திருச்செங்கோடு வேளாண்மை உற்பத்தியாளர்கள் கூட்டுறவு விற்பனை சங்கத்தில் நேற்று பருத்தி ஏலம் நடந்தது. சேலம், நாமக்கல் உள்பட பல்வேறு மாவட்டத்தை சேர்ந்த விவசாயிகள் விற்பனைக்காக 4 ஆயிரம் மூட்டை பருத்தியை கொண்டு வந்தனர். இதில் பி.டி. ரக பருத்தி ஒரு குவிண்டால் ரூ.9 ஆயிரத்து 700 முதல் ரூ.12 ஆயிரத்து 69 வரையும், டி.சி.எச். ரக பருத்தி ஒரு குவிண்டால் ரூ.9 ஆயிரத்து 900 முதல் ரூ.13 ஆயிரத்து 369 வரையும் ஏலம் போனது. மொத்தம் ரூ.1 கோடியே 25 லட்சத்துக்கு பருத்தி விற்பனை நடந்தது.

மேலும் செய்திகள்