பரமக்குடியில் அனுமதியின்றி ஊர்வலம் சென்ற 24 பேர் கைது

பரமக்குடியில் அனுமதியின்றி ஊர்வலம் சென்ற 24 பேர் கைது செய்யப்பட்டனர்.

Update: 2022-03-26 19:34 GMT
பரமக்குடி, 

பரமக்குடி நகராட்சிக்கு உட்பட்ட எமனேசுவரத்தில் இரட்டைமலை சீனிவாசன் பகுதி உள்ளது. இங்கு மின்சாரம், குடிநீர் மற்றும் அடிப்படை வசதிகள் மேற்கொள்ளப்படாமல் இருப்பதாக கூறி அப்பகுதி மக்கள் பரமக்குடி தனி தாசில்தார் அலுவலகத்தை முற்றுகையிட ஊர்வலமாக சென்றனர். அதைத் தொடர்ந்து பரமக்குடி வைகை ஆறு படித்துறை முருகன் கோவில் அருகே செல்லும்போது எமனேசுவரம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் தமிழ்ச்செல்வம் தலைமையில் போலீசார் ஊர்வலமாகச் சென்ற முருகன், தேவதாஸ் உள்பட 24 பேரை கைது செய்தனர்.

மேலும் செய்திகள்