இந்திய கடலோர காவல்படை கப்பல் தீவிர ரோந்து
மண்டபம்-ராமேசுவரம் இடையே கடல் பகுதியில் இந்திய கடலோர காவல்படை கப்பல் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டது.
இலங்கையில் ஏற்பட்டு உள்ள பொருளாதார சீரழிவு காரணத்தால் அங்கிருந்து அகதிகள் பலர் இந்தியாவுக்கு வர தொடங்கி உள்ளனர். இந்த நிலையில் ராமநாதபுரம் மாவட்ட கடல் பகுதியில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. மண்டபம்-ராமேசுவரம் இடைப்பட்ட கடல் பகுதியில் இந்திய கடலோர காவல் படைக்கு சொந்தமான கப்பல் ஒன்று ரோந்து பணியில் ஈடுபட்டுள்ள காட்சி.