வீடுகளுக்கு கொசுவலை வழங்கும் திட்டம்
வீடுகளுக்கு கொசுவலை வழங்கும் திட்டம். பேரூராட்சி மன்ற தலைவர் செல்வி ஆனந்தன் தொடங்கி வைத்தார்.
ஸ்ரீமுஷ்ணம்,
ஸ்ரீமுஷ்ணம் அரசு மேம்படுத்தப்பட்ட ஆரம்ப சுகாதார நிலையத்தில், காச நோய் இல்லாத பாரதம் என்ற தலைப்பில் காசநோய் ஒழிப்பது குறித்து விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. இதற்கு நிலைய தலைமை டாக்டர் ஜனார்த்தனன் தலைமை தாங்கினார். டாக்டர் ஸ்ரீதர் முன்னிலை வகித்தார். சிறப்பு அழைப்பாளராக ஸ்ரீமுஷ்ணம் பேரூராட்சி மன்ற தலைவர் செல்வி ஆனந்தன் கலந்து கொண்டு ஸ்ரீமுஷ்ணம் பகுதியில் உள்ள அனைத்து வீடுகளுக்கும் கொசுவலை வழங்கும் திட்டத்தை தொடங்கி வைத்தார்.
தொடர்ந்து காசநோய் ஒழிப்பு உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சியும் நடைபெற்றது. இதில் பேரூராட்சி மன்ற துணை தலைவர் முத்தமிழரசி பார்த்திபன், வார்டு உறுப்பினர்கள், தி.மு.க. நகர செயலாளர் செல்வக்குமார் மற்றும் நிலைய சுகாதார செவிலியர்கள், பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர். முடிவில் சுகாதார ஆய்வாளர் அன்பரசன் நன்றி கூறினார்.