அன்னவாசல் அருகே 2 மலைப்பாம்புகள் பிடிபட்டன

2 மலைப்பாம்புகள் பிடிபட்டன.

Update: 2022-03-26 18:51 GMT
அன்னவாசல்:
அன்னவாசல் இடையர்தெரு குடியிருப்பு அருகே உள்ள வேலியில் 2 மலைப்பாம்புகள் இருப்பதை பொதுமக்கள் பார்த்தனர். இதுகுறித்து அவர்கள் இலுப்பூர் தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் அளித்தனர். இதையறிந்த இலுப்பூர் தீயணைப்பு நிலைய அலுவலர் கணேசன் தலைமையிலான, வீரர்கள் விரைந்து வந்து 2 மலைப்பாம்பையும் பிடித்து வனத்துறையினரிடம் ஒப்படைத்தனர். பின்னர் 2 மலைப்பாம்புகளையும் வனத்துறையினர் நார்த்தாமலை வனப்பகுதியில் கொண்டு விட்டனர். 

மேலும் செய்திகள்