அறிவியல் கண்காட்சி
குளித்தலை அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் அறிவியல் கண்காட்சி நடைபெற்றது.
குளித்தலை,
குளித்தலையில் உள்ள அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் அறிவியல் கண்காட்சி நடந்தது. இதனை குளித்தலை கல்வி மாவட்ட அலுவலர் பாலசுப்பிரமணியன் தலைமை தாங்கி தொடங்கி வைத்தார். பள்ளி தலைமை ஆசிரியை மஞ்சுளா முன்னிலை வகித்தார். பள்ளியில் உள்ள 9-ம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு வரை உள்ள மாணவிகள் சார்பில் 7 தலைப்புகளின் கீழ் மொத்தம் 93 படைப்புகள் கண்காட்சியில் வைக்கப்பட்டிருந்தன. இதில் 12-ம் வகுப்பு மாணவி பார்கவி, 11-ம் வகுப்பு அக்சரா, 10-ம் வகுப்பு மாணவிகள் தேவதர்ஷிகா, சுவாதி, 9-ம் வகுப்பு மாணவிகள் கலைவாணி, இனியாழினி, தனுசியா ஆகிய 7 மாணவிகளின் படைப்புகள் சிறந்த படைப்பாக தேர்வு செய்யப்பட்டன.
இந்த மாணவிகள் மாவட்ட அளவில் நடைபெற உள்ள அறிவியல் கண்காட்சியில் பங்கேற்க தகுதி பெற்றுள்ளனர். இந்த கண்காட்சியை இப்பள்ளியில் உள்ள அனைத்து ஆசிரியர்கள், மாணவிகள் உள்ளிட்டோர் பார்வையிட்டனர்.